Its not for advertisement- STR


பாடல், நடனம், நடிப்பு, இயக்கம் என திரைத்துறையில் பல தளங்களில் இயங்கும் சிம்பு, அடுத்தது உலக அமைதிக்காக ஒரு பாடலை எழுதி பாடியிருக்கிறார். அன்புக்கான பாடலாக, உலகத்தின் Love Anthem- ஆக அது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

உலகத்தில் உள்ள 96 மொழிகளில் 'காதல்' என்பதற்கான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அவ்வார்த்தைகள் அனைத்தையும் ஒரு பாடலாக தொகுத்து எழுதி இருக்கிறார். இப்பாடலின் முழுவடிவம் இன்னும் வெளிவரவில்லை.

அப்பாடலின் வீடியோ முன்னோட்டத்தை சோனி நிறுவனம் YOUTUBE இணையத்தில் வெளியிட்டுள்ளது. அவ்வீடியோ பதிவை 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடலுக்கு போட்டியாக சிம்பு எழுதி இருப்பதாகவும், KOLAVERI பாடலால் தனுஷிற்கு கிடைத்து இருக்கும் புகழ் சிம்புவிற்கு பிடிக்கவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இது குறித்து சிம்பு அளித்துள்ள போட்டியில் " LOVE ANTHEM பாடல் எந்த படத்திலும் இடம்பெறவில்லை. படத்தின் விளம்பரத்துக்காகவோ, என்னை பிரபலப்படுத்திக் கொள்ளவோ இப்பாடலை பயன்படுத்தவில்லைமக்கள் அனைவரும் அன்பு செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்  நான் எழுதிய பாடல் தான் இது " என்று தெரிவித்துள்ளார்.

இப்பாடலுக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பால் சிம்பு பெரும் சந்தோஷத்தில் இருக்கிறாராம். அமெரிக்காவில் 2 சர்வதேச பாடகர்களுடன் இணைந்து இப்பாடலின் இறுதி வடிவத்தை தயாரிக்க இருக்கிறார்கள்.

No comments: