சிம்பு ரசிகையாகிவிட்டேன்: மல்லிகா ஷெராவத்!!

சிம்புவின் நடனத்தில் இருக்கும் ஸ்டைலையும், வேகத்தையும் பார்த்து அவருடைய ரசிகையாகிவிட்டேன் என்று கூறியுள்ளார் பாலிவுட் கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத். மணிரத்னத்தின், "குரு" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மல்லிகா ஷெராவத், கமல்ஹாசனுடன் "தசாவதாரம்" படத்தில் சேர்ந்து நடித்தார். பாலிவுட்டின் கவர்ச்சி புயலான இவர், இப்போது சிம்புவின் "ஒஸ்தி" படத்தில், சிம்புவுடன் ஒரு அசத்தலான குத்தாட்டம் போட்டுள்ளார். சிம்புவின் நடன திறமையும், அவரது ஸ்டைலும் தன்னை வியக்க வைத்துவிட்டதாக புகழ்ந்து தள்ளியுள்ளார் மல்லிகா.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிம்புவுடன் நடனம் ஆடியதை மறக்கவே முடியாது. என்ன ஒரு ஸ்டைல், என்ன ஒரு வேகம். நானும் பல நடிகர்களுடன் ஆடியிருக்கிறேன். ஆனால் எந்த ஒரு ஹீரோவும் இப்படி ஆடி, பார்த்தது இல்லை. "ஒஸ்தி" படத்தில் நானும்-சிம்புவும் ஆடிய இந்தபாட்டு நிச்சயம் செம ஹிட்டாகும். எந்தமாதிரியான டான்ஸ் ஆனாலும் ரொம்ப சுலபமாக ஆடு அசத்தி விடுகிறார். உண்மையிலேயே அவர் ஒரு சிறந்த டான்ஸர் தான். சிம்புவின் நடனத்தை பார்த்து நான், அவரது ரசிகையாகிவிட்டேன். மேலும் அவரது முந்தைய படங்களின் நடனத்தையும், நான் பார்க்க வேண்டும் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

No comments: