ஒஸ்தி படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்காதது ஏன்... என்பதற்கு சிம்பு பதிலளித்துள்ளார். யுவன்-சிம்பு காம்பினேஷன் என்றாலே அந்தபடத்தின் பாடல்கள் அனைத்தும் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்பதற்கு இதற்கு முன் வந்த படங்கள் அனைத்தையும் கூறலாம். உதாரணமாக மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், வானம் என்று வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம். அதுமட்டுமல்ல இருவரும் ரொம்ப நெருங்கிய நண்பர்களும் கூட. அப்படி இருக்கையில் சிம்பு நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ஒஸ்தி படத்தில் யுவனுக்கு பதிலாக, தமன் இசையமைத்துள்ளார். இருவருக்கும் ஏதோ பிரச்சனை போல, அதனால் தான் யுவன் இசையமைக்கவில்லை என்று கூட கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார் சிம்பு, மேலும் இதற்கு என்ன காரணம் குறித்து சிம்புவிடம் கேட்டால், எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. தொடர்ந்து பணியாற்றும் போது ஒரு சின்ன மாறுதல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யுவனிடம் கேட்டேன். அவர்தான் தமன் பற்றி சொன்னார். அதனால் தான் தமனை இசையமைக்க வைத்தேன் என்கிறார்.
No comments:
Post a Comment