சிம்புவின் தல விசுவாசம்


தல அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, நண்பன் படத்தில் நடிக்க மறுத்தார். விஜய் நடிக்கும் படத்தில் நான் நடித்தால் சிம்பு ரசிகர்கள் என்னை கோபித்துக் கொள்வார்கள் என்று பகீரங்கமாக ஸ்டேட்மெண்ட் விடுத்து பரபரப்பு கிளப்பினார். ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத விஜய், ஒஸ்தி படத்தின் இசையை கவிஞர் வாலியுடன் சேர்ந்து வெளியிட்டார். தற்போது அஜித் மீதான தனது விசுவாசத்தை நிரூபிக்கும் விதமாக ஒரு அதிரடியான காரியத்தைச் செய்திருக்கிறார் சிம்பு.  
அஜித்தின் - 50-வது படமான மங்காத்தா படம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியானது. டிசம்பர் 8ம் தேதி சிம்புவின் ஒஸ்தி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளை அலங்கரிக்கும் ஒரு அதிரடி விளம்பரம்தான் சிம்புவின் தல விசுவாசத்தைக் காட்டுகிறது. மங்காத்தா நூறாவது நாள் கொண்டாடும் நாளில்தான் தனது ஒஸ்தி வெளியாக வேண்டும் என்று சொன்னாராம் சிம்பு. மங்காத்தா வெளியாகி நூறு நாட்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதை குறிப்பிடும் விதமாக ஒஸ்தி விளம்பரம் டிசைன் செய்யப்படுள்ளது. அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் இந்த விளம்பர யுத்தியை நிச்சயம் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை

No comments: