'ஒஸ்தி'க்கே தனி அர்த்தம் வந்துடுச்சில்ல...; உற்சாகத்தில் தரணி! ( Rajini praises Dharani for Osthi Trailer )


சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் தரணி. இவர் இயக்கத்தில் படம் ஒன்று செய்ய வேண்டும் என்று 'கில்லி' படத்திலிருந்தே கூறி வருகிறார் ரஜினி. ஆனால் நடக்கவில்லை. ஒருமுறை கேஎஸ் ரவிக்குமாருடன் தன் வீட்டுக்கு வந்த தரணியைப் பார்த்ததும், "தரணியுடன் சேர்ந்து ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் படம் தரவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டுள்ளேன். ஆனால் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது," என்றார் ரஜினி. "நீங்க எப்போ சொன்னாலும் தயாரா வர்றேன் தலைவரே," என்று மகிழ்ச்சியுடன் பதிலளித்தார் தரணி. இப்போது அவர் 'ஒஸ்தி' என்ற படத்தை இயக்கியுள்ளார் (அவர் போதாத காலம்!). இந்தப் படத்தின் பாடல் சிடி மற்றும் ட்ரெயிலர் வீடியோவை சமீபத்தில் கேஎஸ் ரவிக்குமார் மூலம் ரஜினிக்கு அனுப்பி வைத்துள்ளார் தரணி. உடனே அந்த வீடியோவைப் பார்த்த ரஜினி, கேஎஸ் ரவிக்குமாரிடம், "நல்ல விறுவிறுப்பான ட்ரெயிலர். குட் மேக்கிங். சிறந்த பொழுதுபோக்குப் படமாக எடுத்திருக்கிறார். நேரில் சந்திக்கலாம்," என்று பாராட்டினாராம் ரவிக்குமாரிடம்!
 யார் நடித்துள்ளார் என்பதையெல்லாம் பார்க்காமல், தனது அன்புக்குரிய ஒரு கலைஞன் இயக்கிய படம் என்பதால் பாராட்டியுள்ளார் ரஜினி. 'குருவி' மூலம் சரிந்த தனது இமேஜை தூக்கி நிறுத்த தரணி நம்பியுள்ள படம் என்பதால், 'ஒஸ்தி'க்கு ரஜினி தந்த பாராட்டு முதல் நல்ல சகுனமாகப் பார்க்கப்படுகிறது! இதுகுறித்து அவர் கூறுகையில், "தலைவர் பாராட்டுன்னா சும்மாவா.. இப்ப படத்தின் தலைப்புக்கே தனி அர்த்தம் வந்துடுச்சில்ல," என்கிறார் மகிழ்ச்சியுடன்! நல்ல நேரம் ஆரம்பமாயிருச்சு... இனி சாரை பிடிக்க முடியாதே..!

No comments: