சிம்புவின் உயிர்த்தோழியான லேகா


கெட்டவன் என்ற படத்தை சிம்பு இயக்கயிருந்தபோது அப்படத்தின் நாயகியாக கமிட்டானவர் லேகா வாஷிங்டன். அதன்பிறகு ஜெயங்கொண்டான், குவாட்டர் கட்டிங் உள்பட சில படங்களில் நடித்தார் லேகா. இந்த நிலையில், தற்போது ஒரு குறும்படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் லேகா. இதற்கான ஸ்கிரிப்ட் பற்றி விவாதிக்க அவர் சிம்புவை அணுகியபோது, தனது வேலை போன்று இழுத்துப்போட்டு கதை விவாதம் நடத்தியிருக்கிறார். அது மட்டுமின்றி, வேண்டுமானால் நானேகூட நடித்து தருகிறேன் என்றும் சொல்லி லேகாவின் மனதில் இன்னும் ஆழப்பதிந்து விட்டாராம் சிம்பு.
Source:Dinamalar

No comments: