3-க்கு நஷ்டஈடு தர தனுஷ்-ஐஸ்வர்யா சம்மதம்!

3 பட நஷ்டத்திற்கு அதற்கு ஈடு தர தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சம்மதம் தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யா, தனது கணவர்  தனுஷை ஹீரோவாக்கி டைரக்டர் அவதாரம் எடுத்த படம் 3. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து இருந்தார். படம் வெளிவருவதற்கு முன்பே, இப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் உலகம் முழுக்க பிரபலமானது. இதனால் 3 படத்திற்கு பெரும் எதிர்பார்பு உண்டானது. ஆனால் படம் வெளியாகி சரியாக போகவில்லை என்பது அனைவரின் கருத்து. இதனால் இப்படத்தை வெளியிட்ட சிலருக்கு பெருத்த நஷ்டம். அதிலும் குறிப்பாக தெலுங்கில் இப்படத்தை கோடி கணக்கில் வாங்கி வெளியிட்ட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான நட்டி குமாருக்கு பலத்த நஷ்டம். இதனால் நஷ்ட ஈடு கேட்டு இருந்தார் நட்டி குமார். இதற்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நஷ்டஈடு தர சம்மதம் சொல்லியுள்ளனர்.

இதுகுறித்து நட்டி குமார் கூறியுள்ளதாவது, தனுஷின் முந்தைய படங்களை காட்டிலும் 3 படத்தை கோடி கணக்கில் வாங்கி வெளியிட்டேன். ஆனால் படம் சரியாக போகாததால் எனக்கு 80 சதவீதம் நஷ்டம். சினிமாவில் நஷ்டம் என்பது இயல்பு தான். ஆனால் 3 படத்தின் நஷ்டம் ஈடு செய்ய முடியாதது. 3 படத்தை குறைந்த செலவில் தான் தயாரித்தார்கள் ஆனால் கொலவெறி பாட்டை வைத்து எக்கச்சக்க பணத்திற்கு விற்றுவிட்டார்கள். எனக்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜவை தொடர்பு கொண்டேன், ஆனால் முடியவில்லை. அதேசமயம் நஷ்டம் தொடர்பாக தனுஷூம், ஐஸ்வர்யாவும் ஈடுகட்டுகிறோம் என்று கூறியுள்ளனர். அவர்கள் இப்படி கூறியது ஆறுதலாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு


ரொம்பவும் மெனக்கெடாமல், மனதில் பட்டதை அப்படியே பேசுபவர் சிம்பு.

சிம்பு நடித்து வரும் ' வேட்டை மன்னன் ' படம் குறித்தும், தான் தயார் செய்து வரும் LOVE ANTHEM குறித்தும் அவர் கூறியிருப்பது :

" வேட்டை மன்னன் ஒரு கேங்ஸ்டர் படம். ஆனால் கேங்ஸ்டர் படம் என்றால் ரொம்ப ROUGH-வாக எல்லாம் இருக்காது. ரொம்ப LIGHT HEARTED காமெடியாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் சொல்லி  இருக்கிறோம்.

தொழில்நுட்பத்தில் தரம் உயர்ந்ததாக இப்படம் இருக்கும். எனது படங்களில் மிகுந்த பொருட்செலவில் தயாராகி வரும் படம் ' வேட்டை மன்னன் '.

படத்தில் மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். கணேஷ், சந்தானம் என்ற எனது அணியில், இப்படத்தில் சந்தானம் கிடையாது. கணேஷ் நடிக்கிறார்.

படத்தின் முதல் பாதி முடியும் தருவாயில் இருக்கிறது. பிரேசில் நாட்டில் இரண்டாம் பாதியை படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம். 'வானம்' படத்திற்கு பிறகு ' வேட்டை மன்னன் ' படத்தில் என்னுடன் யுவன் இணைகிறார்.

எப்போதும் நானும் யுவனும் சேர்ந்தால் பாடல்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்கும். இப்படத்தின் பாடல்களும் நன்றாக அமையும் என்று நினைக்கிறேன்.

என்னுடைய LOVE ANTHEM வீடியோவிற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷக்தி இப்படத்தில் பணியாற்றி வருகிறார். நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் நான் பண்ணும் இரண்டாம் படம் இது.

என்னுடன் 'மன்மதன்', 'வல்லவன்' படங்களில் பணியாற்றிய நெல்சன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். விஜய் டிவியில் 'ஜோடி நம்பர் ஒன்' இயக்கியவர் இவர் தான். இவர் இல்லையென்றால் நான் ' ஜோடி நம்பர் ஒன் ' ஷோ செய்து இருக்க மாட்டேன்.

இப்படத்தில் ஒரு பாடல் பாடுகிறேன். என்னுடைய பாணியில் ஒரு பாடலும் எழுதுகிறேன். நானும் யுவனும் கூட்டணி சேர்ந்தாலே ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைப்போம். இப்படத்திலும் அவ்வாறு நிறைய விஷயங்கள் செய்ய இருக்கிறோம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

YOUTUBEல் LOVE ANTHEM நிறைய பேர் பார்க்க வேண்டும் என்ற முனைப்புடன் எல்லாம் நான் செய்யவில்லை. இப்போதைக்கு நான் இறுதி வடிவம் எல்லாம் நான் வெளியிடவில்லை. சும்மா ஒரு TEASER தான் வெளியிட்டோம்.

அந்த TEASER எதற்கு என்றால் இந்த மாதிரி ஒரு CONCEPTல் நான் பணியாற்றி கொண்டு இருக்கிறேன் என்பதை தெரிவிக்க தான். அதற்கே இந்த மாதிரி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை.

ஏனென்றால் முழுவதும் ஆங்கில வார்த்தைகள் அடங்கியது.. அதை எப்படி மக்கள் எடுத்து கொள்வார்கள் என்பதில் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதில் வரும் ஒரே தமிழ் வார்த்தை ' காதல் ' மட்டும் தான்.

அமெரிக்காவிற்கு சென்று LOVE ANTHEM-க்கு இறுதிவடிவம் கொடுத்து விட்டேன். இன்னும் 1 அல்லது 2 மாதங்களில் அது தயாரானதும் வெளியிடுவேன்.  " என்று கூறியிருக்கிறார்.

                                                                                                                                       Courtesy:Vikatan