அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் U சான்றிதழ்


வானம்' படத்தினைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'ஒஸ்தி'.
ரிச்சா, சோனு தூத், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடிக்க தரணி இயக்கி இருக்கிறார். தமன் இசையமைத்து இருக்கிறார். பாலாஜி ரியல் மீடியா தயாரித்து இருக்கிறது. ஒரு பாடலுக்கு மல்லிகா ஷெராவத் குத்தாட்டம் ஆடி இருக்கிறார்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள். அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் U சான்றிதழ் அளித்து இருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறதுபடக்குழு.
டிசம்பர் 1ம் தேதி படத்தினை பிரம்மாண்டமாக வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.
சசிக்குமார் தயாரிப்பில் வெளிவரும் 'போராளி' படத்தோடு குஸ்தியிட இருக்கிறது இந்த 'ஒஸ்தி'.

No comments: