இதுவரை தான் நடித்த படங்களிலேயே ‘ஒஸ்தி’ படத்திற்காகத் தான் அதிகமாக மெனக்கெட்டிருக்கிறாராம் சிம்பு.
இந்த படத்திற்காக சிம்பு கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை மிடுக்கான தோற்றத்துக்கு கொண்டு வந்தாராம். உணவில் கட்டுப்பாட்டை மேற்கொண்டாராம். ஒரே ஷெட்டியூலில் படத்தினை முடித்து க்ளைமாக்ஸ் காட்சியை சென்னையில் படமாக்கி வந்தார்கள்.
‘டபாங்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சல்மான்கான் சட்டையை கழற்றி தனது 6 பேக்குடன் உடலைக் காட்டி, சண்டையிட்டு இருப்பார். அது போல ‘ஒஸ்தி’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக தனது உடம்பை முழுவதுமாக தயார் செய்து சண்டை காட்சிகளில் நடித்து வந்தார் சிம்பு.
நவம்பர் 9ம் தேதியுடன் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது. பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பை முடித்தார்கள் படக்குழுவினர்.
பிரியாணி பிரியர் ஆன சிம்பு இப்படத்தில் இடம்பெறும் கட்டுமஸ்தான தோற்றத்திற்காக, கடந்த 2 மாதங்களாக பிரியாணி சாப்பிடவில்லை. படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குனர் தரணி சிம்புவிற்கு பிரியாணி விருந்து படைத்திருக்கிறார்.
இது குறித்து சிம்பு ” கடந்த இரண்டு மாதங்களாக இப்படத்திற்காக பிரியாணி சாப்பிட முடியவில்லை. ஆகையால் தரணி எனக்கு மொத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் பிரியாணி விருந்து கொடுத்தார்.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக நான் எனது சட்டையை கழற்றிய உடன் படக்குழுவினரும், உடன் நடித்த சோனுவும் அசந்துவிட்டனர் ” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment