முன்பு சிம்பு, விஷால் பற்றி கடுமையாக பேசியதற்கு டைரக்டர் தருண்கோபி மன்னிப்பு கேட்டுள்ளார். திமிரு, காளை என இரண்டு படங்களை இயக்கிய தருண்கோபி, அந்த இரு படங்களின் நாயகர்களான விஷால் மற்றும் சிம்பு குறித்து முன்பு கடுமையாகப் பேசிவிட்டார். தற்போது பேச்சியக்கா மருமகன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் அவர், நடிகர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டாராம்.
இதுபற்றி தருண்கோபி அளித்துள்ள பேட்டியில், மாயாண்டி குடும்பத்தார் படத்திற்குப் பிறகு எனக்கு வந்த கதைகள் அனைத்துமே கையில குச்சிய வச்சிக்கிட்டு ஆடு மேய்ப்பது போலதான் வந்தன. எதையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்தான் இவ்வளவு இடைவெளி. இந்த படத்திற்காக ஒரு நடிகனாக பெரும் உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். அப்போதுதான் புரிந்தது நடிகர்களின் நிலை. இந்த நேரத்தில் நான் என் சக நடிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முன்பு சில நிகழ்ச்சிகளில் பேசும் போது விஷால், சிம்பு போன்ற நடிகர்கள் மீது கோபப்பட்டு பேசியிருக்கிறேன். அதற்காக வருத்தமும், அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
பேச்சியக்கா மருமகன் படம் மாமியார் & மருமகன் கதையாம். இதில் மருமகனாக தருண் கோபி நடிக்க, மாமியாராக ஊர்வசி நடிக்கிறார். இப்படத்திற்கு தருண் கோபி கதை, வசனம் எழுத, அவருடைய நண்பரும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவருமான பாலகுமாரன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.
No comments:
Post a Comment