சிம்புவின் நடிப்பில் தயாராகி வெளியிட கத்துக் கொண்டிருக்கும் படம் ஒஸ்தி. படத்தின் பாடல்களும், டிரெய்லர்களுமே ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துவிட்டதால், படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
ஒஸ்தி படம் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று செய்திகள் வெளியாயின. இந்த படத்திற்கு சற்றும் குறைவில்லாமல் ‘காதல் என் காதல்’ என்ற பாடல் மூலம் ரசிகர்களின் மத்தியில் வெற்றியை உறுதி செய்துவிட்ட படமான தனுஷின் ‘மயக்கம் என்ன’ படமும் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர்களால் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில், படத்தின் ஹீரோவான சிம்பு ’ஒஸ்தி’ டிசம்பர் 2ஆம் தேதி தான் வெளியாகிறது என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதன் காரணமாக ”தனுஷ் என் நண்பர் அவருடன் போட்டிபோட்டு என் படம் நன்றாக ஓட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
ஒரு நல்ல படத்தை ரசித்து பார்க்க மக்களுக்கு நேரம் தேவை. இரு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் பட்சத்தில் மக்களுக்கு அது கிடைக்காது. எனவே ’ஒஸ்தி’ 2ம் தேதி தான் ரிலீஸ்” என்று கூறினார்.
தனது அடுத்த படமான வேட்டை மன்னனின் இயக்குனருடன் ரிலாக்ஸ் செய்ய வெளிநாடு பறந்து விட்டார் என சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment